நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானியம்; அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயார் செய்கிறது 

கோலாலம்பூர்: 

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானியம் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தயார் செய்கிறது என்று துணைப்பிரதமர் டத்ஹோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார். 

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கொள்கையளவில் மடானி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்த நிலையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset