நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா

ரியாத்:

சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கவுள்ளது.

2024 பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் அழகி ரூமி அல்காதானி பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து ரூமி அல்காதானி கூறுகையில், சவுதி அரேபியாவின் உண்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் தனது செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ரூமி அல்காதானி மிஸ் சவூதி அரேபியா, மிஸ் மிடில் ஈஸ்ட் (சவூதி அரேபியா), மிஸ் அராப் வேர்ல்ட் பீஸ் 2021 மற்றும் மிஸ் உமன் (சவுதி அரேபியா) ஆகிய பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset