நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஈராண்டுக்கு நடத்தப்பட்ட அந்த ஆய்வில் சிகரெட் புகைக்கும் பழக்கமுடையவர்களும் மின்சிகரெட்டுகள் பக்கம் திரும்புவதாகத் தெரியவந்தது.

Milieu Insight நடத்திய ஆய்வில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 6,000 பேரிடம் தகவல் திரட்டப்பட்டது.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மின்சிகரெட்டுகளைப் புகைப்போரின் எண்ணிக்கை சுமார் 5 விழுக்காடு.

2021 டிசம்பரில் அது 4 விழுக்காடாக இருந்தது.

மின்சிகரெட்டுகளைக் கைவிடும்படி அறிவுறுத்தும் இயக்கத்தை 4 வர்த்தகச் சங்கங்கள் அறிமுகம் செய்துள்ளன.

மின்சிகரெட்டுகளைப் புகைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தும் ஒட்டுவில்லைகளைப் பொது இடங்களில் இனி காணமுடியும்.

தீவெங்கும் சுமார் 600 காப்பிக் கடைகளை நிர்வகிக்கும் Foochow, Kheng Keow ஆகிய சங்கங்களும் இயக்கத்தில் சேர்ந்துள்ளன.

மின்சிகரெட்டுகளின் பயன்பாடு சிங்கப்பூரில் சட்டவிரோதம்.

மின்சிகரெட்டுடன் பிடிபடுவோருக்கு அதிகபட்சம் 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset