நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிந்தாமல் சிதறாமல் 2 கிலோமீட்டர் உணவை கையில் ஏந்தி வேகமாக நடக்க வேண்டும்: பாரிஸில் உணவு பரிமாறும் ஊழியர்களுக்காக  ஒரு பந்தயம்

பாரிஸ்:

ஒரு கையில் தட்டு, மறு தட்டில் ரொட்டி, காப்பி, தண்ணீர்...

எதுவும் சிந்தாமல் சிதறாமல் 2 கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும்.

பிரான்சின் பாரிஸ் நகரில் உணவு பரிமாறும் ஊழியர்களுக்காகவே தனிப் பந்தயம்!

கறுப்புக் காற்சட்டை... கழுத்துப் பட்டை (Tie)..மேலாடை...  அணிந்த ஊழியர்கள் பல்வேறு வீதிகளில் தட்டுகளுடன் நடந்தனர்.

நகரில் 13 ஆண்டுகளுக்குப் பின் பந்தயம் மீண்டும் நடைபெறுகிறது.

அது முதன்முதலில் 1914இல் நடத்தப்பட்டது.

உணவு பரிமாறும் ஊழியர்களின் வேலையை எடுத்துக்காட்ட பந்தயம் ஒரு சிறப்பான வழி என்று ஊழியர்கள் சிலர் கூறினர்.

அன்றாடம் 12, 13 மணிநேரம் வேலை பார்ப்பது வழக்கம்... தட்டை ஒரு கையில் பிடித்தவாறு 2 கிலோமீட்டர் தூரம் நடப்பதற்குத் தெம்பு இருப்பதாக அவர்கள் கூறினர்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset