நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உங்களுக்குத் தெரியாவிட்டால் அதை பற்றி பேசாதீர்கள்: வான் ஃபய்சாலுக்குப் ஃபஹ்மி எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா: 

பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடினுக்குத் தனது பிரதிநிதி மூலம் தொகுதிகளுக்கான நிதி தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை அளித்ததாகப் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றை அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் அலுவலகம் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அத்தகைய வரைவு எதுவும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் ஃபஹ்மி கூறினார்.

தாம் தொடர்பு கொண்ட அரசாங்கத் தலைவர்களுக்குப் பல அரசியல் செயலாளர்களும் இதே பதிலையே தமக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனால், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதுவும் தெரியாவிட்டால், அவர் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஃபஹ்மி இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, பெர்சது யூத்தின் தலைவரான வான் ஃபய்சால், அன்வார் தனது "பிரதிநிதி" மூலம் ஒரு "வரைவு ஒப்பந்தத்தை" ஹம்சாவிடம் சமர்ப்பித்ததாகக் கூறினார்.இது எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கான ஏற்பாடு தொடர்பானது.

சம்பந்தப்பட்ட ஆவணம் இல்லை என்று நேற்று மறுத்த ஃபடில்லா உட்பட யாருக்கும் இந்த விஷயம் தெரியாது என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட ஃபடில்லா, மார்ச் 19-ஆம் தேதி ஹம்சாவுடனான சந்திப்பில் கூறப்படும் வரைவு எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.

கடந்த வியாழன் மக்களவையில், ஹம்சா தனது கட்சிக்கு முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு பற்றிய வரைவு ஆவணம் கிடைத்துள்ளதாக கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset