
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமமுகவுக்கு 4, OPS அணிக்கு 4, பா ம கவிற்கு 8 தொகுதிகள்: பாஜக ஒதுக்கீடு?
சென்னை:
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாரதிய ஜனதா மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் ஏற்கெனவே தொகுதி பங்கீடு முடிவடைந்து, போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஏற்கெனவே டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில், அமமுகவுக்கு 4 தொகுதிகளும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா ம கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm