நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவுத் துறை தடுப்புக்காவல் முகாம்களில் அந்நியப் நாட்டினர் துன்புறுத்தலா? உள்துறை அமைச்சர் மறுப்பு

பெட்டாலிங் ஜெயா: 

இந்நாட்டிலுள்ள குடிநுழைவுத் துறை முகாம்களில் அந்நிய நாட்டினர் துன்புறுத்தப்படுகின்றனர்  என்ற மனித உரிமைகள் குழுவின் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது.

குடிநுழைவுத் துறை முகாம்களில் கொள்ளளவைக் காட்டிலும் அதிகமான கைதிகள் உள்ளதால் அங்கு நெரிசல் மிகுந்த காணப்படுவதாக மனித உரிமைகள் குழு வெளியிட்ட குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார். 

நாடு முழுவதுமுள்ள 20 குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் முகாம்களைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் கடந்தாண்டு சுமார் 12 கோடி வெள்ளியைச் செலவிட்டது. 

மேலும் அவர்களுக்கு உணவளிப்பதற்கும் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கான பெர்ரி அல்லது விமானக் கட்டணங்களுக்காகவும் மேலும் 8 கோடி வெள்ளியை செலவிடப்பட்டதையும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அந்நிய நாட்டினருக்குத் தங்கள் தரப்பால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாகவும் இது போன்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் தெரிவித்தார். 

இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக உள்துறை அமைச்சு மற்றும் குடிநுழைவுத் துறையை நாடாளுமன்ற சிறப்பு செயல்குழு அழைத்தது. இந்த விசாரணைக்கு மனித உரிமைகள் குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றார் அவர்.

துன்புறுத்தல் அல்லது இறப்பு தொடர்பான ஆதாரங்களை வெளியிடும் படி கோரப்பட்டபோது அவர்களால் சிறிய ஆதாரத்தைக் கூட முன்வைக்க முடியவில்லை. ஆனால் அவர்களின் பிரசாரம் உலகம் முழுவதும் பரவிட்டது என்று அவர் கூறினார்.

மக்களவையில் இன்று தடுப்புக் காவல் முகாம்களில் அந்நிய பிரஜைகள் துன்புறுத்தப்படுவதாக வெளிவந்த மனித உரிமைகள் குழுவின் குற்றச்சாட்டு குறித்துப் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இருபதாயிரம் தடுப்புக் காவல் கைதிகளை தடுத்து வைப்பதற்குரிய வசதியை நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் மையங்கள் கொண்டுள்ளதாகவும் கடந்த மார்ச் 7-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள மையங்களில் 13,635 கைதிகள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset