நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடுவில் கோரப்படும் பல தகவல்கள் தேவையற்றவை: ராட்ஸி

கோலாலம்பூர்:

முதன்மை தரவுத் தளம் பாடுவில் கோரப்படும் பல தகவல்கள் தேவையற்றவை. 

புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ராட்ஸி ஜிடின் மக்களவையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

அரசு நிறுவனங்களில் ஏற்கனவே கிடைக்கும் வருமானம் போன்ற சில தகவல்களைச் சேர்க்க வேண்டியதன் அவசியம் என்ன. 

இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்.

பெரும்பாலான மலேசியர்களின் வருமானப் பதிவுகள் உள்நாட்டு வருவாய் வாரியத்தில் உள்ளன. 

இதில் கேள்வி என்னவென்றால், அரசாங்கம் ஏன் இந்தத் தகவலை நேரடியாகச் சேர்க்கவில்லை.

அதைச் சரிபார்க்க அனுமதித்தது? இன்று மன்னரின் உரையில் விவாதம் நடத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வருமான வரியில் பதிவுகள் இல்லாதவர்களுக்கு, பாடு அவர்களை அடையாளம் காண முடியும். 

இதை எளிதாக்குவதற்கு சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றால், இந்த ஒருங்கிணைந்த அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பு அவை ஏன் செய்யப்படவில்லை? என்று ராட்ஸி ஜிடின் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset