நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஜொகூர் பாரு :

ஜொகூர் மாநிலத்தில் கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. 

நேற்று இரவு மணி 8 வரை 301 குடும்பங்களைச் சேர்ந்த 1153 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1197-ஆக உயர்ந்துள்ளது. 

310 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது 12 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ளதாக ஜொகூர் மாநிலச் செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

அதிக வெள்ளப் பாதிப்புகளைக் கொண்ட மாவட்டமாக கோத்தா திங்கி உள்ளதாகவும் அங்கு அமைக்கப்பட்டுள்ள 8 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 197 குடும்பங்களைச் சேர்ந்த 793 பேர் தங்கியுள்ளதாகவும் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அவர்  தெரிவித்தார்.

மெர்சிங்கில் மொத்தம் 73 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் 2 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ள நிலையில் குளுவாங்கில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேர் ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர். 

மேலும், 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் ஜொகூர் பாருவிலுள்ள ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். 

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியில் நாளை வரை கடுமையான மழை எச்சரிக்கையும், சிகாமாட், பத்து பஹாட், குளுவாங், பொந்தியான், கூலாய், ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் தொடர் மழைக்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset