நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 69 நாட்கள் கூடும்

பெட்டாலிங் ஜெயா: 

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத்திற்கான நாட்களின் எண்ணிக்கை 74-லிருந்து 69-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட ஐந்து நாட்கள் குறைவாகும்

இவ்வாண்டுக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இந்த ஆண்டுக்கான முதல் அமர்வு பிப்ரவரி 26 முதல் மார்ச் 27 வரை நடைபெறும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நிஜாம் மைடின் பாச்சா மைடின் தெரிவித்துள்ளார். 

இரண்டாவது அமர்வு ஜூன் 24 முதல் ஜூலை 18 வரையிலும், மூன்றாவது அமர்வு அக்டோபர் 7 முதல் டிசம்பர் 5 வரையிலும் நடைபெறும்.

RM16,000 மாத சம்பளம் தவிர, நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு RM400 சம்பளம் வழங்கப்படும். 

மேலும், அதிகாரப்பூர்வ கூட்டங்கள், பட்டறைகள், விளக்கங்கள், கருத்தரங்குகளில் பங்கேற்போருக்கு  ஒரு நாளைக்கு RM300 பெற தகுதியுடையவர்கள்.

மற்ற சலுகைகளில் நிலையான மாதாந்திர பயணக் கொடுப்பனவு RM1,500, தொலைபேசி அலவன்ஸ் RM900 ஆகியவை அடங்கும்.

ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றம் எத்தனை நாட்கள் கூடும் என்பது பிரதமரின் விருப்பத்திற்கு உட்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset