![image](https://imgs.nambikkai.com.my/Yunus.jpeg)
செய்திகள் உலகம்
நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸுக்கு வங்கதேசத்தில் சிறை
டாக்கா:
வங்கதேசத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ், 'கிராமீன் கம்யூனிகேஷன்ஸ்' என்ற வங்கியை தொடங்கி, லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார்.
அவரது பொருளாதார சிந்தனைக்காக கடந்த 2006-ம் ஆண்டில்அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த 2007-ல் முகமது யூனுஸ் அரசியலில் கால் பதித்தார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தொழிலாளர் சட்ட விதிமீறல் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம்யூனுஸுக்கு 6 மாதம் சிறை சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் அவர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 15, 2025, 7:16 pm
காஷ்மீர் விவகாரத்துக்கு பேச்சு மூலம் தீர்வு: துருக்கி அதிபர்
February 15, 2025, 3:48 pm
இலங்கை நாடாளுமன்றத்தில் 2025 வரவு செலவுத்திட்டம் பிப்ரவரி 17இல் சமர்ப்பிக்கப்படும்
February 15, 2025, 12:27 pm
ஜப்பானில் கடுமையான பனிப்புயல்
February 14, 2025, 8:57 pm
Google நிறுவனம் மீது வழக்கு: மெக்சிகோ அதிபர் கிளவ்டியா தொடுக்கிறார்
February 14, 2025, 8:34 pm
செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
February 14, 2025, 5:43 pm
ஜெர்மனியில் காரைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல்: குறைந்தது 30 பேர் வரை படுகாயம்
February 14, 2025, 12:50 pm
மியான்மரில் 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குடியின ஆயுதக் குழுவினா் மீட்டனா்
February 14, 2025, 12:36 pm
சிங்கப்பூர் எல்லைகளைச் சென்ற ஆண்டு மட்டும் 230 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கடந்துள்ளனர்
February 14, 2025, 12:22 pm
இந்தியா அதிகமான வரி வசூலித்தால் அமெரிக்காவும் விதிக்கும்: டிரம்ப் எச்சரிக்கை
February 14, 2025, 10:57 am