நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

214 தனியார் பாலர் பள்ளிகளுக்கு 13.06 மில்லியன் ரிங்கிட் மித்ரா வழங்கியது

ஈப்போ:

நாட்டில் அரசு சார்பற்ற இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள்  வழி நடத்தி  வரும் பாலர் பள்ளிகளில் பயிலும் பி்40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு மித்ரா 13.06 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்கியுள்ளது

கடந்த காலங்களில பாலர் பள்ளிகளுக்கு உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு நூறு வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 

இம்முறை அந்த தொகை 100 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாக  மித்ராவின் தலைமை இயக்குனர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட்டில் செயல்பட்டு வரும் சோமேல் மாஜூ பாலர் பள்ளியின் பரிசளிப்பும் 6 வயது மாணவர்களுக்கு  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அரசு சார்பற்ற பாலர் பள்ளிகளில் பயின்று வரும்  மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பி40 பிரிவைச் சேரந்த மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கடந்த ஆண்டு வழங்கப்பட்டதாக அதற்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கியுள்ளது.

கடந்த 2021 ஆண்டு அரசு சார்பற்ற பாலர் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 6100 ஆக இருந்தது, 2022 இல் சுமார் 5164  ஆயிரம் மாணவர்களாக  இருந்தனர். இன்று அதன் எண்ணிக்கை 4450 பதிவாகியுள்ளது  

ஆண்டுக்கு ஆண்டு பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருவது கவலை அளிப்பதாகவும், அதன் எண்ணிக்கை அதிகரிக்க சமுக இயக்கங்கள் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ரவீந்திரன் நாயர் வலியுறுத்தினார்.

பேரா,  சுங்கை சிப்புட்டில் உள்ள அம்னோ  மண்டபத்தில் நடைபெற்ற மாணவர்கான  பரிசளிப்பு விழாவில் பெரும் திரளானோர் கலத்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய சோமேல் மாஜூ பாலர் பள்ளியின் ஆலோசகர் கணேசன்  ரத்தனம் , வசதி குறைந்த மாணவர்களின் சுமையை குறைக்க மித்ரா நிதி வழங்கி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மாணவர்க்களுக்கு பள்ளி சீருடை, பள்ளி உபகரணங்கள வாங்கவும் நிதி ஒதுக்கீட்டையும் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.

சுங்கை சிப்புட், தாமான் முகிபா ஜெயாவில்  செயல் பட்டு வரும் சோமேல் மாஜூ பாலர் பள்ளியில் 61 மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். 

ஐந்து ஆசிரியர்களைக் கொண்டு  இந்த பலர் பள்ளி சிறப்புடன செயல் படு வருகிறது.

அடுத்தாண்டுக்கான மாணவர்கள் பதிவும் நடைபெற்று வருவதாகவும் கணேசன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நடைபெற்ற மாணவர்களின் படைப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset