
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியர்களுக்கு மலேசியா வழங்கியது போல, மலேசியா, சிங்கப்பூர் நாட்டினருக்கு இந்தியா வர விசா சலுகை வழங்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு நவாஸ் கனி எம்பி கோரிக்கை
சென்னை:
இந்தியர்களுக்கு மலேசியா வழங்கியது போல, மலேசியா, சிங்கப்பூர் நாட்டினருக்கு இந்தியா வர விசா சலுகை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,
இந்தியர்கள் மலேசியா செல்ல டிசம்பர் 1 முதல் விசா தேவை இல்லை என மலேசியா அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல மலேசியா, சிங்கப்பூர் நாட்டினர்களும் இந்தியா வருவதற்கு விசா சலுகை வழங்க வேண்டும்.
மலேசியா, சிங்கப்பூர் நாட்டினர் அதிகமாக இந்தியாவோடு தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டோடு பாரம்பரிய கலாச்சார ரீதியாகவும், தமிழர்களோடும் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
வணிக ரீதியாகவும், சுற்றுலாவிற்கும், மருத்துவ தேவைகளுக்கும் அதிகமாக தமிழ்நாட்டிற்கு பயணிப்பவர்களாக மலேசியா, சிங்கப்பூர் நாட்டினர் உள்ளனர்.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் அந்த நாட்டு குடிமக்கள் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். அதேபோல் மலேசிய குடியுரிமை உள்ளவர்கள் 181 நாடுகளுக்கு விசா அனுமதி இன்றி பயணிக்க முடியும். ஆனால் தொப்புள் கொடி உறவான இந்தியாவிற்கு வர வேண்டுமானால் அவர்கள் பணம் செலுத்தி விசா பெற்று வர வேண்டிய நிலை உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு அந்த இரு நாட்டவரும் இந்தியாவிற்கு விசா இன்றி வருவதற்கு சலுகை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, நவாஸ் கனி எம்பி ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
- புதுமடம் ஜாஃபர்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm