நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

7-ஆவது முறையாக ஏடிபி டென்னிஸ் கிண்ணத்தை வென்றார் நோவாக் ஜோகோவிச்

துரின் :

ஏடிபி கிண்ண டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 7-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

36 வயதான ஜோகோவிச் இதுவரை 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று எட்டாவது முறையாக உலகின் முதல் நிலை வீரராக நோவாக் ஜோகோவிச் திகழ்கின்றார்.

துரினில் நடைபெற்ற இப்போட்டியில், ஜோகோவிச் ஜானிக் சின்னரை 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தனக்கு எப்போதும் உயர்ந்த லட்சியங்களும் இலக்குகளும் உள்ளன என்று ஜோகோவிச் தெரிவித்தார்.

அடுத்த சீசனில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை விட பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது முக்கிய இலக்கு என்று ஜோகோவிச் ஒப்புக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset