செய்திகள் விளையாட்டு
12 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய நெய்மார்
ரியோ டி ஜெனிரோ:
பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தனது சிறுவயது அணிக்கு திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு அதில் தனக்கு தேவையான அன்பு கிடைக்குமிடம் சன்தோஷ் கிளப் தான் எனக் கூறியுள்ளார்.
நெய்மரின் சவூதி அரேபிய கிளப்பான அல் ஹிலால் உடனான ஒப்பந்தம் ஜனவரி 25இல் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.
32 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார்.
முதன் முதலாக சன்தோஷ் கிளப்பில் விளையாடி தான் நெய்மர் புகழ்பெற்றார்.
அதற்கு பிறகுதான் 2013இல் பார்சிலோனா அணிக்கு தேர்வாகி பல மறக்க முடியாத ஆட்டங்களை மெஸ்ஸியுடன் ஆடினார்.
அல் ஹிலால் அணியில் இணைந்த பிறகு காயத்தினால் அவதியுற்று கடந்தாண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் நெய்மார் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
நான் எனது வீட்டிற்கு திரும்பியதுபோல் இருக்கிறது. நான் எனது நண்பர்களுடனும் குடும்பத்துடனும் இருக்கிறேன். அவர்கள் சில விஷயங்களை எழுத எனக்கு உதவினார்கள்.
நாளைவரை என்னால் காத்திருக்க முடியாது. நான் என்ன முடிவெடுப்பேன் என எனது குடும்பம், நண்பர்களுக்குத் தெரியும்.
நான் மீண்டும் சன்தோஷ் கிளப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன்.
உலகம் முழுவதுமுள்ள எனது ரசிகர்களுக்கு நன்றி. எனது நீண்டநாள்களாக இருந்துவரும் ஆசை நனவானது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2025, 10:07 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
February 3, 2025, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
February 2, 2025, 12:07 pm
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
February 2, 2025, 12:04 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
February 1, 2025, 1:19 pm
ரொனால்டோ நிகழ்த்திய சாதனையை மெஸ்ஸி நெருங்குவது கூட கடினம்
January 31, 2025, 11:03 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 31, 2025, 11:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
January 30, 2025, 11:22 am
சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
January 30, 2025, 11:15 am