நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வங்கக் கடலில் மத்லி புயல்: தமிழகத்தில் 6 நாள்களுக்கு பலத்த மழை

புது டெல்லி:

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை இரவு புயலாக மாறும் என்றும் இதனால் தமிழகத்தில் 6 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

இது வெள்ளிக்கிழமை புயலாக வலுப்பெற்று சனிக்கிழமை  வங்கதேச கடற்கரையையொட்டி நகர்ந்து மோங்லா - கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு "மத்லி' என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset