செய்திகள் இந்தியா
தெருநாய்க் கடிக்கு ஒரு பல் பதிவுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்
சண்டீகர்:
தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த மாநில அரசுகளுக்கு பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாய்கள் உள்ளிட்ட தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய நிவாரணம் வழக்கக் கோரி 193 மனுக்கள் பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீது நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் அளித்த தீர்ப்பில், இதற்கான நிவாரணத் தொகையை வழங்கும் பொறுப்பு மாநில அரசுடையதாகும். இந்தத் தொகையை பாதிப்புக்கு காரணமான நிறுவனம் அல்லது தனி நபரிடமிருந்து மீட்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு மாநில அரசு அளிக்கலாம்.
இந்த நிவாரணத் தொகையுடன், தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு பல் பதிவுக்கு ரூ. 10,000 வீதம் நிவாரணம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு நாய் கடித்ததில் உடலில் சதை இழப்பு ஏற்பட்டிருந்தால், 0.2 செ.மீ. சதை இழப்புக்கு ரூ. 20,000 வீதம் கணக்கிட்டு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2026, 7:58 am
பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்
July 16, 2026, 1:15 pm
பத்ரிநாத் கோவிலில் நன்கொடை, காணிக்கைகளில் ஊழல்: பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கம்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 13, 2026, 3:24 pm
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
