
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 25, 26-ஆம் தேதிகளுக்கு மாற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ
சென்னை:
தமிழக அரசால் வரும் நவ.18-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நவ. 18, 19-க்கு பதில் 25, 26 தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வரும் 2024 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக். 27-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் வசதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவம்பர் 4, 5 மற்றும் 18,19 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நவ 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழக அரசால் நவ.18-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு முகாம் தேதிகளை நவ.18,19-க்கு பதில், நவம்பர் 25,26 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றியமைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வசதிக்காக நவ.13-ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்ததுடன், அதற்கு மாற்றாக நவ. 18-ஆம் தேதியை பணி நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm