நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி : பொதுமக்கள் கருத்து

வாஷிங்டன் :

அமெரிக்காவில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 

இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 விழுக்காடு பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சிதைந்து விட்டதாக கூறி உள்ளனர்.

மேலும், சுமார் 37 விழுக்காட்டினர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 விழுக்காட்டினர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. 

74 விழுக்காட்டினர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். 

எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனுக்குப் பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக அந்தக் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்குத் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset