நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அருணாசல வீரர்களுக்கு சீனா விசா மறுப்பு: ஆசிய விளையாட்டு போட்டியை இந்திய அமைச்சர் புறக்கணிப்பு

புது டெல்லி:

சீனாவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து அந்த விளையாட்டுப் போட்டிகளைக் காண சீனா செல்லும் பயணத்தை இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ரத்து செய்தார்.

சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வுஷு எனும் விளையாட்டில் பங்கேற்க 8 பேர் கொண்ட இந்திய குழு வெள்ளிக்கிழமை இரவு சீனா செல்ல இருந்தது.

இந்நிலையில், அதில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுத்துள்ளது.

அருணாசலத்தை தனது பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா அங்கிருந்த வருபவர்களுக்கு ஸ்டெபில் விசா அளித்து வந்தது. தற்போது விசா அளிக்கவே மறுத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset