நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது ஜார்ஜியா மாகாண நீதிமன்றம்

வாஷிங்டன்:  

2020 இல் நடைபெற்ற  அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அமைத்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

டிரம்ப் மற்றும் 18 பேர் மீது 41 குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீதிமன்றம் வெளியிட்டது.

அமெரிக்க அதிபராக 2017 முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து சுமத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஏற்கெனவே, இது தொடர்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கடந்த சில  தினங்களுக்கு முன்  உறுதி செய்திருந்தநிலையில், தற்போது ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset