நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அஜர்பைஜான் - ஆர்மீனியாவுக்கும் இடையே போர் பதற்றம்: ஐ.நா. அவசர ஆலோசனை

நியூயார்க்:

சாலைப் போக்குவரத்தை அஜர்பைஜான் படையினர் முடக்கியுள்ளதால், அண்டை நாடான ஆர்மீனியாவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தணிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.

சர்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகார்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே 2020இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அதைத் தடுக்க ஐ.நா.வின் அவசர கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset