நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தேர்தல் தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி

வாஷிங்டன்:

2020 இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை மாற்றியமைக்க முயன்றாக நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

இது குறித்து இந்த வழக்கின் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் ஜான் ஸ்மித் கூறியதாவது:
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளார்.

அந்தத் தீர்ப்பில், அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய அதிபருக்கு வழங்குவதற்காக  நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு செய்தது, அரசு அதிகாரிகள் பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக சதி செய்தது, அமெரிக்கர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக சதி செய்தது ஆகிய 4 குற்றச்சாட்டுகளை நீதிபதி உறுதி செய்தார்.

தேர்தலில் தோல்விடைந்த 2 மாதங்களுக்குப் பிறகும், பதவியில் நிலைத்திருப்பதற்கான முயற்சியில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டார். அதற்காக அவர் கூறியது அனைத்தும் முழுமையான பொய்கள் ஆகும். அது டிரம்ப்புக்கே நன்றாகத் தெரியும் என்றார் ஜான் ஸ்மித்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset