நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடத்தில் X லோகோ வைக்கப்பட்டது 

சன் பிரான்ஸிஸ்கோ : 

கடந்தாண்டு எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதில் ஒரு பகுதியாக டிவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார். 

இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய "X" லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டது.  

இதனிடைய, "X" லோகோ வைக்கப்பட்டதற்கு முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது. 

மேலும், அந்தக் கட்டடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர். 

அதுமட்டுமல்லாமல், அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகார் செய்துள்ளனர். 

இது குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது. சன் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது. 

இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset