நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் பதிவு செய்யாத இஸ்லாமிய சமயப் பள்ளியை நடத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர்: 

முஸ்லிம் ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் சுமார் 16 ஆண்டுகளாகப் இஸ்லாமிய சமய விவகாரத்துறையான முயீஸ் அலுவலகத்தில் பதிவுசெய்யாமல் இஸ்லாமியச் சமயப் பள்ளியை நடத்தியதாகவும் பொய்யான கோட்பாட்டைக் கற்றுக்கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

65 வயது முஹம்மத் ரசிஃப் ரடி (Mohd Razif Radi) மீது முஸ்லிம் சட்டத்திற்கு மாறான கோட்பாட்டைக் கற்றுக்கொடுத்தது. இஸ்லாமியச் சமயப் பள்ளிகள் தொடர்பான முஸ்லிம் சட்ட விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரரான அவர் அரப் ஸ்டிரீட் வட்டாரத்தில் 7 ஜாலான் பிசாங்கில் உள்ள Lina's Cafe உணவகத்தில் அந்தப் பள்ளியை நடத்தி வந்துள்ளார்.

2004க்கும் 2020க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் சூதாட்டத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு என்றும் ஆணும் பெண்ணும் ஆன்மிகம் மூலம் செய்துகொள்ளும் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறியதாக நம்பப்படுகிறது.

2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் அவர் மீது புகார் அளித்த பின் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ 2,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset