நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரோஜர் எங் தனது சிறைத் தண்டனை 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

நியூயார்க்: 

கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ரோஜர் ங்கின் 10 ஆண்டு சிறைத்தண்டனையை சுமார் 3 மாதங்களுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1MDB ஊழலில் அவரது பங்குக்காக மார்ச் மாதம் ரோஜருக்குத் தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி மார்கோ ப்ரோடி, திங்களன்று அவரது கோரிக்கையை விளக்கமில்லாமல் ஏற்றுக்கொண்டார். ரோஜர் தனது சிறைத் தண்டனையை மே 4 ஆம் தேதி அனுபவிக்கத் தொடங்குவதாக இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்து நியூயார்க்கிற்குப் வந்திருக்கும் தனது மனைவி மற்றும் 10 வயது மகளுடன் அதிக நேரம் செலவழிக்க என்ஜியின் சிறைத்தண்டனையை ஒத்திவைக்குமாறு வழக்கறிஞர் மார்க் அக்னிஃபிலோ கோரினார். 
இதற்கு, அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

2018- ஆம் ஆண்டு மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மகனை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரோஜர் பார்க்கவில்லை என்று அக்னிஃபிலோ கூறினார்.

2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு ரோஜர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் விடுவிக்கப்பட்டவுடன் மலேசியாவில் வழக்கை எதிர்கொள்வார் என்று அவர் கூறினார்.

-அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset