நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் அமெரிக்காவிற்கு பயணிக்கலாம்: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன் :

மே 12-ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவிற்கு வருபவர்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுப் பரவல் காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதியில்லை. 

இதனிடையே, கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், காண்டிராக்டர்கள், அனைத்துலகப் பயணிகள் ஆகியோருக்கு மே 12-ஆம் தேதியிலிருந்து நீக்குவதாகவும் இதே நாளிலிருந்து கோவிட்-19 வைரஸ் பொது சுகாதார எச்சரிக்கை காலமும் முடிவுக்கு வருவதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனவரி 2021-ஆம் ஆண்டிலிருந்து கோவிட்19 தொற்றுப் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 விழுக்காடு வரை குறைந்துள்ளது. 

மேலும், உலகளவில் கோவிட்-19 தொற்றால் உயிரிழப்புகள்  குறைந்துள்ளன. தடுப்பூசி அவசியம் என்ற விதிகள், பிரம்மாண்ட தடுப்பூசி பிரசாரம் காரணமாகப் பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset