நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை போரில் மனித உரிமை மீறல்: கடற்படை தளபதிக்கு அமெரிக்கா தடை

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது மனித உரிமை மீறலில் குற்றச்சாட்டின்போரில் இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகோடெ அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கை தெரிவித்துள்ளது

இலங்கையில் தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப் போரை இலங்கை அரசு நடத்தியது.

அப்போது இலங்கை கடற்படை தளபதியாக வசந்த கரன்னகோடெ  இருந்தார். அவர் மீது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

அதன் பிறகு, ஜப்பானுக்கான இலங்கைத் தூதராக கரன்னகோடெ நியமிக்கப்பட்டார்.

தற்போது, இலங்கையில் உள்ள ஒரு மாகாணத்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கரன்னகொட அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset