நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகள் வழங்கிய நேட்டோ நாடுகள்

கீவ்:

ரஷியாவை எதிர்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுவதாக நேட்டோ உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்திருந்தன. அந்த வாக்குறுதில் கூறப்பட்டிருந்த 98 சதவீத தளவாடங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

அந்த நாட்டுக்கு இதுவரை 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.

இது மட்டுமின்றி, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் பயிற்சி அளித்துள்ளன.

இந்த உதவிகள் மூலம் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நாட்டுப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்றார் அவர்.

இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset