நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பென்சில்வேனியா மாநிலத்தில் தீபாவளிக்குப் பொது விடுமுறை

வாஷிங்டன்: 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைத் தாண்டி  உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு  வெள்ளை மாளிகையில் தீபாவளிப் பண்டிகையை அதிபர் ஜோ பைடன் கொண்டாடினார். 

இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்ப்பட்டுள்ளது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம் மாநில மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். இதையடுத்து, இந்தச் சட்டம் பென்சில்வேனியா மாநில மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset