நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்

புது டெல்லி:

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து தில்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றறச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், பெங்களூரில் இருந்த சங்கர் மிஸ்ராவை தில்லி போலீஸார் ஜன7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணையின்போது தில்லி காவல்துறை அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டது.

அவருக்கு ஜாமீன் வழங்க ஜனவரி 11 ஆம் தேதி கீழ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து தில்லி நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா மேல் முறையீடு செய்தார்.

சங்கர் மிஸ்ரா ரூ. 1 லட்சம் பிணை பத்திரம் அளிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம்  உத்தரவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset