செய்திகள் விளையாட்டு
டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜோகோவிச் - சபலென்காவும் முன்னேற்றம்
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய போட்டியில் 10ஆவது முறையாக கைப்பற்றி பிரமிக்க வைத்த நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4 இடங்கள் முன்னேறி மொத்தம் 7,070 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஏற்கனவே 374 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ள ஜோகோவிச் மறுபடியும் முதல் நிலை அரியணையில் ஏறியுள்ளார். ஒட்டுமொத்த டென்னிசில் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாகும்.
பிப்ரவரி 27-ந்தேதி வரை 35 வயதான ஜோகோவிச் முதலிடத்தில் இருக்கும் பட்சத்தில் ஸ்டெபி கிராப்பின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைப்பார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 2ஆவது இடத்துக்கு (6,730 புள்ளி) தள்ளப்பட்டார்.
மற்றொரு ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2ல் இருந்து 6ஆவது இடத்துக்கு சறுக்கினார். ஆஸ்திரேலிய போட்டியில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்த கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் உயர்ந்து 3ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
பெண்கள் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து 44ஆவது வாரமாக முதல் நிலை இடத்தில் தொடருகிறார்.
ஆஸ்திரேலிய பட்டத்தை வென்று தனது கிராண்ட்ஸ்லாம் கனவை நனவாக்கிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 3 இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தை எட்டியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 8:37 am
பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது: எப்ஏஎம்
October 28, 2025, 8:28 am
லா லீகா கால்பந்து போட்டி: அல்டாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
மலேசியா, ஆசியான் நாடுகளில் கால்பந்து வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பிரதமரை பிபா தலைவர் சந்தித்தார்
October 26, 2025, 10:39 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 26, 2025, 10:33 am
