நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

22ஆவது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

மெல்பர்ன் -

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று நடந்தது.

இதில் உலக தரவரிசையில் 4ஆவது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா) தர வரிசையில் 3ஆவது இடத்தில் இருப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதினர். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றார்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜோகோவிச் 22ஆவது கிராண்ட்சிலாம்  பட்டத்தை வென்று உள்ளார்.

இதன் மூலம் ஸ்பெயிம் வீரர் நடாலுடன் இச்சாதனை அவர் பகிந்துக் கொண்டுள்ளார்.
நடாலும் 22 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset