நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: ரணில் விக்ரமசிங்க உறுதி

கொழும்பு:

இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தம்
முழுமையாக அமல்படுத்தப்படும் என்று  அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, 'தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-ஏ பிரிவு சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்று விட்டது.

இதை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அதிபராகிய எனது பொறுப்பு. இதை அமல்படுத்த விரும்பவில்லை என்றால் அந்தச் சட்டத்தை நீக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் ஒற்றையாட்சி நடைபெறுகிறது. கூட்டாச்சிக்கு நான் எதிரானவன். ஏனென்றால், இலங்கை மாகாண கவுன்சில்களுக்கு லண்டன் மாநகராட்சிகளைவிட குறைந்த அதிகாரம்தான் உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும்  13-ஏ சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த பிப்ரவரி 8-ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்துவேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset