நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நடிகர் ரஜினி சிகிச்சைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

சென்னை: 

உடல்நிலை பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருவது வழக்கம். முன்னதாக சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை தொடர்ந்து பெற்று கொண்டிருந்தார். 

தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் ரஜினி குதிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. தேர்தலுக்கு முன்பு 'அண்ணாத்தே' படப்பிடிப்பில் ஹதராபாத்தில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு  தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டது. அது அவருள் பல கேள்விகளை உண்டாக்கியது. தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரஜினி தனது உடல்நிலை குறித்து முதன்முறையாக  பேசினார். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தி இருப்பதையும் அறிவித்து தான் அரசியலில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அதிரடியாக சொன்னார். அவரது அரசியல் வருகையை எதிர்ப்பர்ர்த்திருந்த பலருக்கும் அவரது அந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக பிஜேபி கட்சிக்கு அது பின்னடைவு என்று அரசியல்  விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Superstar Rajinikanth to fly to the US in a private jet - Details - Tamil  News - IndiaGlitz.com

தற்போது கொரோனா பரவல் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி பாதிப்புகளை அதிகரித்து வந்துள்ள நிலையில் தனது சிகிச்சைக்கு ரஜினி தகுந்த நேரம் பார்த்து வந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் சிகிச்சையை பெற்று கொள்ள அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்த வரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். 

அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி சிகிச்சை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், ரஜினியின் மருமகனான தனுஷ், 'தி கிரே மேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார். தற்போது ரஜினியும் அமெரிக்கா செல்லவுள்ளதால் மகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட குடும்பத்தினரும் இணைந்து கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset