
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு, 267 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,78,298 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 23,78,298 ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 23,207 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 22,23,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 30,068 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 108 பேரும், அரசு மருத்துவமனையில் 146 பேரும் உயிரிழந்துள்ளனர்.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 793 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 526614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் 1,25,215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 13,92,357 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 6,727 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 9,85,903 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 5,078 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 273 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 204.
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 7:42 am
ஓபிஎஸ் ஒரு வேஸ்ட் பீஸ் என்று புறக்கணித்த பா ஜ க
August 1, 2025, 7:28 am
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am