நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

தோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு பிரேசில் அணியினர் முன்னேறி உள்ளனர்.

கத்தாரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் தென் கொரியா அணியை சந்தித்து விளையாடினர்.

ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.

வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். 

இதனால், முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியின் 76-ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். 

இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset