நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரூபன் அமோரிமை நிர்வாகி பொருப்பில் இருந்து மென்செஸ்டர் யுனைடெட் நீக்கியது

லண்டன்:

ரூபன் அமோரிமை நிர்வாகி பொருப்பில் இருந்து மென்செஸ்டர் யுனைடெட் அதிரடியாக நீக்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லீட்ஸ் யுனைடெட் அணியுடனான 1-1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை கண்டது.

இதைத் தொடர்ந்து, 14 மாதங்கள் பொறுப்பில் இருந்த ரூபன் அமோரிம் தலைமைப் நிர்வாகி பதவியிலிருந்து அக்கிளப் நீக்கியது.

இந்த அதிரடி முடிவின் மூலம்  போர்த்துகல் நிர்வாகி ஓல்ட் டிராஃபோர்டை விட்டு சீக்கிரமாக வெளியேறுகிறார்.

இருப்பினும் அவரது ஒப்பந்தம் 2027 வரை உள்ளது.

அதே வேளையில் மென்செஸ்டர் யுனைடெட் தற்போது பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

மேலும் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் 18 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர் டேரன் பிளெட்சர் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் அக்கிளப் நிர்வாகம் நிரந்தர நிர்வாகியை தேடுகிறது.

குறிப்பாக 14 மாதங்கள் மட்டுமே பொறுப்பில் இருந்த ரூபன் அமோரிம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அதிக விலையை எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset