நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் இந்தியா தோல்வி 

மிர்புர்:

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. அதில் இந்திய அணியை வங்காளதேசம் தோற்கடித்தது. 

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான், 7 ரன்களிலும் , ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். 

மறுபுறம் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ராகுல் 73ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

வங்காளதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும் , எபடோட் ஹுஸைன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். 

187 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாட ஆரம்பித்தது. துவக்க ஆட்டக்காரர் நஜ்முல் ஹுசைன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆனால், லிட்டன் தாஸ் இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 44 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் மிரட்டிய வங்காளதேச அணி..!  186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

ஷாகிப் அல் ஹசன் மட்டும் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட் ஜோடியாக இணைந்த மெஹ்தி ஹஸனும் முஸ்தபிசுர் ரஹ்மானும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை அழகாக எதிர்கொண்டு வங்காளதேசத்திற்கு வெற்றியை வசமாக்கினார்கள். 

ஒரு கட்டத்தில் வங்க தேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களுடன் 39வது ஓவரில் தடுமாறியது. 

மெஹதி ஹசன் மிராஸ் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் போராடி விளையாடினார். 

மெஹ்தி ஹஸன் 39 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடங்கும். கடைசி விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து அற்புதமாக ஆடினார்கள்.

இந்திய அணியின் சார்பில் முஹம்மத் சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.  

தொடர்புடைய செய்திகள்

+ - reset