செய்திகள் விளையாட்டு
கோஸ்டா ரிகாவை வீழ்த்தியும் பயனில்லை: வெளியேறியது ஜெர்மனி
தோஹா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக கிண்ண கால்பந்து தொடரின் ஏ பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி, கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.
70-ஆவது நிமிடத்தில் மானுவல் நியூர் சொந்த கோல் அடித்ததால் கொஸ்தா ரீகா 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலைப் பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார்.
மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது.
போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்ததால் தொடரில் இருந்து ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறின.
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:05 am
போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு
October 4, 2026, 9:58 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து அபாரம்
October 3, 2026, 10:44 am
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
October 3, 2026, 10:41 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
