நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கத்தாரில் மெஸ்ஸியை விடப் பிரபலமாகியிருக்கும் 'Metro guy' - யார் இவர்?

தோஹா:

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடும் விளையாட்டாளர்கள் மட்டும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. சில உலகக் கிண்ண ஊழியர்களும் மக்கள் மனங்களை கவர்ந்துள்ளார்கள்.

கென்யாவைச் (Kenya) சேர்ந்த 23 வயது அபுபக்கர் அப்பாஸ் (Abubakr Abbass) திடீரென்று சமூகத் தளங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

காற்பந்து ஆட்டங்களைக் காண வந்த ரசிகர்களைச் சுக் வாகிஃப் (Souq Waqif) மெட்ரோ நிலையத்திற்கு வழி அனுப்புவது அவர் வேலை.

Metro Man: Kenyan TikToker at World Cup Says He Got to Qatar by Sheer Luck  - Tuko.co.ke

இது அலுப்புத் தட்டும் வேலைதானே என்று கூட சிலர் நினைக்கலாம்.

ஆனால் அந்தச் சாதாரண வேலையைப் பெரும் உற்சாகத்துடன் செய்து வருவதால் அப்பாஸ் மக்கள் மனங்களில் இடம் பிடித்துவிட்டார்.

உயரமான நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி 'மெட்ரோ...மெட்ரோ' என்று அவர் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களுக்கு வழி காட்டும் காணொலி  TikTok தளத்தில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

#metroguy என்ற குறியீட்டின் கீழ் உள்ள காணொலிகள் 12 மில்லியன் முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளன.

அவரைக் காட்டும் பதிவுகள் பல்லாயிரக் கணக்கில் விருப்பக்குறிகளையும் பெற்றுள்ளது.

உற்சாகத்துடன் இவர் செய்யும் பணியை அங்கீகரிக்க இவரது நிறுவனம் பல பரிசுகளை வழங்கியுள்ளது.
ஆதாரம் : Today

தொடர்புடைய செய்திகள்

+ - reset