நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தன் சொந்த காரின் வடிவத்தை மாற்றியதற்கு ரூ 2 லட்சம் அபராதம்

 லடாக்:

ஜம்மு-காஷ்மீரில் காரின் வடிவத்தை ஸ்டைலாக மாற்றியவருக்கு சிறைதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஃபரூக் என்பவர், தனது மகிந்திரா தார் காரின் வடிவத்தை அவரது மனதுக்கு பிடித்த மாதிரி புதிய பாணியில் மாற்றியிருக்கிறார். ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வருவது போல தனது காரை அவர் மாற்றி அமைத்திருந்தார் ஃபரூக். பெரிய சக்கரங்கள், எல்இடி விளக்குகள், ரிவர்ஸ் கியர் சைரன், பக்கவாட்டு கண்ணாடிகள் என பல்வேறு extra fittings-களை காரில் வைத்து ஃபரூக் அசத்தியிருந்தார். 

இதனை பார்த்த ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. 

அப்போது ஆர்.சி.புக்கில் குறிப்பிடப்பட்டிருப்பது போல வாகனத்தின் வடிவம் இல்லை என்றுகூறி அவர் மீது கடுமையான அபராதம் விதித்துள்ளது. 

இதனைதொடர்ந்து ஃபரூக்கிற்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் அல்லது சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஃபரூக்கின் மிகிந்திரா தார் காரை பழைய வடிவத்திற்கு மாற்றி அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொந்த வாகனத்தை, சொந்த செலவில் மாற்றியமைத்தது ஒரு குற்றமா? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன். மாற்றி இருந்தால் அதற்குரிய போக்குவரத்து வரி விதிக்கலாமே. அதைவிட்டு அபராதமும் ஜெயிலுமா தண்டனை என்று அவர் தலையில் அங்கலாய்த்து அமர்ந்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset