நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் பணமும் அதிகாரமும் சிலரின் கைகளில் குவிந்துள்ளது: ராகுல் காந்தி

மும்பை:

பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

மகாராஷ்டிரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பொதுக் கூட்டத்தில் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக வேளாண் இடுபொருள்களுக்கான செலவு நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது.

விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்பதே இல்லை.  

பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் உரிய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உதவுவதே இல்லை. இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கனவாகவே உள்ளது.

கடின உழைப்பு இருந்தாலும் இளைஞர்களால் போதிய வருவாய் ஈட்ட முடியவில்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே பெரும் சிரமமாக உள்ளது. இவை அனைத்துக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் முக்கியக் காரணம்.

மத்திய அரசு தொடர்ந்து செய்து வரும் தவறுகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரிடம் குவிந்துவிட்டது என்றார் ராகுல்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset