நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் 

சென்னை: 

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக் கடலுக்கு நகர்ந்து செல்லக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக  ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: 

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 11-ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 11 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 10 செ.மீ., சிதம்பரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். 2 நாட்களில்தமிழகம், கேரளாவை கடந்து அரபிக்கடலுக்கு செல்லக்கூடும். 

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 12, 13, 14-ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 15-ஆம்தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல்மிக கனமழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset