நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ போட்டியில் அடைவு நிலை குறித்து விளையாட்டாளர்கள்மீது குற்றம் சாட்ட முடியாது; அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

வியட்நாம் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் அடைவு நிலை குறித்து விளையாட்டாளர்களை குற்றம் சாட்ட முடியாது.

அதே வேளையில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்மத் ஃபைசல் தனக்கு தாமே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும்; அவர்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் துணையமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய அணி 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், இவ்விவகாரத்தில் விளையாட்டாளர்களை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது.

இந்த அடைவு நிலைக்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட விளையாட்டுத்துறையில் உள்ள அனைத்து தலைவர்களும்தான் காரணம்.

ஆகவே ஒட்டுமொத்த குற்றச்சாட்டையும் விளையாட்டாளர்கள் மீது சுமத்துவது அநாகரீகம் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset