நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வெண்கலத்துடன் நாடு திரும்புங்கள்

ஹனோய்:

வெண்கலப்பதக்கத்துடன் நாடு திரும்புங்கள் என்று ஹரிமாவ் மலாயா அணியை இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத்  பைசால் அஸுமு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹரிமாவ் மலாயா அணியினர் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறி வியட்நாம் அணியிடம் தோல்வி கண்டனர்.

இருந்த போதிலும் இறுதியாட்டத்திற்கு முன்னேறுவதற்கான ஹரிமாவ் மலாயா அணி இறுதிவரை போராடி தோல்வி கண்டனர்.

அவர்களின் போராட்டத்திற்கு நாம் அனைவரும் தலை வணங்க வேண்டும்.

அதே வேளையில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மலேசிய அணி இந்தோனேசியா அணியை சந்தித்து விளையாடவுள்ளனர்.

இவ்வாட்டத்தில் மலேசிய அணி வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்று அனைத்து மலேசியர்களும் பிரார்த்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset