நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக முதல்வர் மாநகரப் பேருந்தில் திடீர் பயணம் 

சென்னை:

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, திடீரென 29C மாநகரப் பேருந்தில் ஏறி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் ஆட்சி எப்படி இருக்கிறது என்று பேசிக்கொண்டே பயணம் செய்தார்.

கோபாலபுரம் இல்லத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்ற முதலமைச்சர் திடீரென பேருந்து நிறுத்தத்தின் அருகில் காரை நிறுத்திதச் சொல்லி இறங்கினார்.

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.

 இலவச பேருந்து பயணம் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

பெண் பயணிகளிடம் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

29 சி பேருந்தில் பயணித்த முதல்வரை சக பயணிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். பேருந்தில் முதலமைச்சரைப் பார்த்த பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

பலரும் முதலமைச்சரைப் பார்த்த மகிழ்ச்சியில் எழுந்து நின்றனர். அவர்களை மு.க.ஸ்டாலின் அமரச்சொன்னார்.

பேருந்து நடத்துநனரிடம் முதலமைச்சர் பேசிக்கொண்டே பயணித்தார்.

பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி, கார் மூலம் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா கருணாநிதி, நினைவிடத்திற்கு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset