நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தமது பொங்கல் வாழ்த்துகளை சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார்.

பொங்கல் என்னும் அறுவடைத் திருவிழாவைத் தமிழர்கள் நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள் என்று திரு. லீ கூறினார்.

அறுவடை சிறப்பாய் அமைந்ததற்காக சூரியனுக்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றார் பிரதமர் லீ. 

இவ்வாண்டும் பொங்கல் கொண்டாட்டங்கள் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், இப்போது நாம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகப் பிரதமர் லீ கூறினார்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதையும் அவர் சுட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset