செய்திகள் உலகம்
ஈரானின் இயற்கை எரிவாயு வயல் மீதான தாக்குதலால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்?
வாஷிங்டன்:
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் Benjamin Netanyahu இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை செய்ய வேண்டாம் என நெதன்யாகுவிடம் நான் சொல்லி இருந்தேன்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஈரான் பதிலடியாக சவுதி அரேபியாவின் யான்பு துறைகமுத்தில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் drone மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இயற்கை எரிவாயு மையங்கள், குவைத்தில் உள்ள 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்போக்குவரத்தை ஈரான் தடுத்ததன் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு உலகம் போராடி வரும் நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் பல ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:00 am
தலைவன் கொல்லப்பட்டாலும் தடம் மாற மாட்டோம்: ஈரான் புரட்சிகர இராணுவம் சபதம்
March 20, 2026, 10:12 am
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்: பெஞ்சமின் நெதான்யாகு
March 19, 2026, 9:52 pm
"எங்களுக்குத் தெரியாது": ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்: குறைகூறிய டிரம்ப்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
