நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இந்தியரான தஹ்ஸீன்

கத்தார்:

கண்ணூர் மாவட்டம் தலச்சேரி சேர்ந்த ஜம்ஸீத் - ஷைமா தம்பதியர் மகன் தஹ்ஸீன் முஹம்மது

FIFA 2026 உலகக் கோப்பை 
கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்ற கத்தார்  அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார் இந்தியரான 19வயது தஹ்ஸீன் முஹம்மது

ஜம்ஸீத் நீண்ட காலமாக கத்தாரில் பணியாற்றுவதால் குடும்பத்துடன் கத்தாரில் வசித்து வருபவர்.
தஹ்ஸீன் முஹம்மது பிறந்ததும், படித்ததும் கத்தாரில் தான்.

கண்ணூர் பல்கலைக்கழக அணி 
முன்னாள் கால்பந்து வீரரான 
தந்தை ஜம்ஸீத் மகனுக்கும் பயிற்சி அளித்ததில் பள்ளிக்கூட அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

கத்தார் அல்-துஹைல் உள்ளூர் அணியில் இணைந்து Under 17,  Under 19 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தஹ்ஸீன் முஹம்மது உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் கத்தார் அணியில் இடம்பிடித்த முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

- குளச்சல் அஜீம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset